Tuesday, 25 September 2012

சுந்தரபாண்டியன்....

கலக்கல் பாண்டியன்....



படத்தின் பயோடேட்டா :
இயக்குனர் : பிரபாகரன்
இசை : ரகுநந்தன்
ஒளிப்பதிவு : பிரேம்குமார்
தயாரிப்பு : சசிகுமார்
நடிகர்கள் : சசிகுமார், லக்ஷ்மி மேனன், சூரி, விஜய் சேதுபதி, பிரபாகரன்



நம்ம சுந்தரபாண்டியன்.....



படம் பார்க்க போனா சந்தோஷமா பார்த்துட்டு வரணும்ங்கிற இலட்சியதோட வாழுறவ நானு.  அழுமூஞ்சி படங்களை பார்க்க போகவே மாட்டேன். இந்த படத்தில சிரிக்க வைக்கிறாங்கன்னு சொன்னாங்க. அதனால பார்க்க போனேன்.... 

எடுத்த உடனே உசிலம்பட்டிக்கு ஒரு பெரிய பில்ட் அப் கொடுத்து நம்ம உசுப்பேத்தி உட்காரவச்சாலும் படம் பாதி வரைக்கும் காமெடிதான். அப்புறம் வெட்டு குத்துன்னு போய் நம்மளை பயம் காட்டி கடைசில பாக்கியராஜூக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும்ல, அது மாதிரி நம்ம சசிகுமாருக்குன்னு உள்ள ஸ்டைல்ல படத்தை முடிச்சிட்டாங்க...

ஹீரோ அறிமுகம் 'தமிழ் படம்' ன்னு சிவா நடிச்சு  வெளி வந்துதே (scoof film) அதை ஞாபகப்படுத்தியது.   கொஞ்சம் செயற்கையா இருந்தது. ஆனா பாட்டு நல்லா இருந்தது. பாட்டிகளும் நல்லா  இருந்தாங்க...

படம் முழுவதும் பார்க்க பார்க்க சசிகுமார்....சசிகுமார்....சசிகுமார்.....துறுதுறுப்பா சிரித்த முகத்துடன் ரொம்ப ரொமான்டிக்கா....இப்படியே எல்லா படத்திலும் நடிச்சா நல்லா  இருக்கும். முதலில் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த கண்களில் தெரிந்த குறும்பும் சிரிப்பும் சசிகுமாருக்கு ஒரு வெல்கம் போட வைத்துவிட்டது.



அடுத்து இனிகோ பிரபாகரன் கொஞ்சம் அழகுதான். காதல் வந்து பொய்யாக பாடலில் காதலை நல்லாவே காட்டியிருக்கிறார். அப்புறம் சூரியை பற்றி சொல்லியேயாகனும். இந்த மாதிரி சாதாரணமாக நல்லா நடிக்கிறவங்களை சசிகுமார் மாதிரி ஒன்றிரண்டு பேர்தான் பயன்படுத்தனுமா என்ன.... அப்புக்குட்டி ஓகே...

கதாநாயகி

அடுத்து ஹிரோயின் லக்ஷ்மி மேனன். பெரிய பிரமாத அழகு இல்லைதான். பெரிய நடிப்பும் இல்லைதான். அதற்காக அஞ்சலி மாதிரி ஓவர் அலட்டலும் இல்லை. போதும் இந்த படத்துக்கு......


இவர்தான் இசை 

இசைக்காக ரகுநந்தனுக்கு ஒரு சபாஷ் போடலாம். கிராமத்து இசை கேட்க சுகமாக இருக்கிறது....'ரெக்கை முளைத்தேன்'  பாடலில்  வேறு ஏதோ பாட்டின் சாயல் தெரிகிறது. பரவாயில்லை...பாட்டு நல்லா  இருக்கிறதாலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.  'காதல் வந்து பொய்யாக' பாட்டில்  ஹரிச்சரனின் குரல் சொக்கவைக்கிறது.

சரி....இனி கதைக்கு வருவோம்....
அதிசயமா இந்த படத்தில கொஞ்சமா கதை இருக்குப்பா...

காதல், கொலை, வெட்டு, குத்து எது வேணும்னாலும் நீங்க பண்ணலாம்....அப்பான்னு ஒருத்தர் மட்டும் கொஞ்சம் பசையோட  இருந்தா போதும்ங்கிற கிராமத்து லாஜிக்கை வைத்துதான் கதையை ஒட்டியிருக்கிறார்கள். திருப்பியும் இன்னொரு முறை நட்பை உயிர்ப்பித்து இருக்கிறார்கள். 

இவர்தான் டைரக்டர்

ஊரில அத்தை பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனாலும் குழந்தை பெத்தாலும் இருக்கிற மவுசை அழகா உறவோட காமிச்சிருக்கார் டைரக்டர். முதல் படம்ன்னு சொல்ல முடியலை. சசிகுமாருக்கு கீழே வேலை பார்த்த அனுபவம் படம் முழுவதும் பேசுது. 

கொஞ்ச நாளைக்கு அப்புறமா ஒரு படத்தை குடும்பத்தோட உட்கார்ந்து சிரிச்சி பார்க்கலாம்னா அது இதுவா தான் இருக்கும். இப்படி அப்பப்போ ஒரு படம் வந்தா பொம்பளைங்க நாங்க கொஞ்சம் சந்தோஷப்படுவோம்ல....

தியேட்டர்ல போய் பார்க்க வேண்டிய படம்.....

Friday, 27 January 2012

அக்கா - தங்கை பாசம்

மனதை வருடும்......


           வேட்டை படத்தில் வரும் 'தைய  தக்க  தக்க..... அக்காகேத்த மாப்பிள்ளை' பாடல் ஹரிணி மற்றும் சைந்தவியின் குரலில் பெண்களாகிய எங்களுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு அக்கா தங்கையின் அன்யோன்யத்தை திரையில் காண்பித்தது.சமீரா ரெட்டியும் அமலா பாலும் ரொம்ப அழகு இதில். சகோதரிகளின் இடையே இருக்கும் அன்பு, மனம் விட்டு பழகும் விதம்,அந்த வயதின் நெருக்கம் எல்லாமே தனிதான். இந்த பாட்டு அதை உயிர்ப்பித்துவிட்டது.  பார்க்கும் போதே சகோதரிகளின் பாசமும் ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் சந்தோஷத்தை கொடுத்தது. நன்றி அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கு....


பெண்களுக்கு மலரும் நினைவுகள் ....
ஆண்களுக்கு enjoy.....











Tuesday, 6 December 2011

செல்வராகவனின் மயக்கம்தான் என்ன.....





மயக்கம் என்ன....






டைரக்டர் செல்வராகவன் 


           இந்த திரைப்படம் டைரக்டர் செல்வராகவனுடைய அழகான படைப்பு.  படத்தை பார்த்து முடிக்கும் போது படத்தில் இருந்த அமைதி ஒரு நாள் பொழுதாவது நம்மை கலைத்தது நிஜம். இந்த பாதிப்பை ஏற்படுத்திய தனுஷுக்கு பாராட்டு. தனுஷின் நடிப்பு திறன் படத்துக்கு படம் மெருகேறுகிறது என்பதும் உண்மை.



 First half of the film is commercial  about Love and second half is like an art film about Career.  

         இந்த படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் அருமை. அப்படி எத்தனை பேரால் பிரித்து பார்க்க முடியும்? பாடல்கள் படத்தின் கதையோடு ஒன்றி போயிருப்பது சமீபத்தில் வெளி வந்த படங்களில் இதில் மட்டும்தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 



  படம் முழுவதும் தண்ணியிலேதான்  (சத்தியமா தண்ணீரோ  , கண்ணீரோ இல்லை )  மிதக்கிறது....கலாச்சார சீரழிவு (Dating , Drinking , Flirting ) படத்தின் முதல் பாதியில் தலைவிரித்து ஆடுகிறது. டைரக்டர் ஒரு பேட்டியில் dating  க்கும் loving  க்கும் என்ன வித்தியாசம் என்பதை நமக்கு ஒரு class  வேறு எடுத்தார்.

             உழைப்பவனுக்கு உடல் வலி அது தீரத்தான் குடிக்கிறான் என்று சொல்லி சொல்லி அந்த வர்க்கத்தையே நம் சமுதாயம் நாசமாக்கிவிட்டது. youth  ன்னா இப்படிதான் dating போவது, தண்ணி அடிப்பது என்று formulate  பண்ணி இந்த தலைமுறையையும் கெடுத்து அடுத்த தலைமுறையையும் கெடுக்கிறார்கள்...ஆமாம் அடுத்து இவர்களின் குழந்தைகளின் DNA யை டெஸ்ட் பண்ணி பார்த்தால், nucleic acid  இருக்காது, ethanol  தான் இருக்கும்.

             நிஜத்தை எடுக்கிறேன் பேர்வழி என்று சின்ன சின்னதாக அங்கங்கே நடக்கும் விஷயங்களை பொதுவாகவே நடப்பதாக காண்பித்து சமுதாயத்தை சீரழிப்பதே திரைபடத்துறையின் பொழுது போக்காகிவிட்டது. 

             
              தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது. அவங்க மயக்கத்தில் இருந்தாங்கன்னா மயக்கம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.... இல்லை, குழப்பத்தில் இருந்தாங்கன்னா குழப்பம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.....அது அவர்களின் இஷ்டம்.....  



திருவாளர் செல்வராகவன் 





"அடிடா அவள...உதடா  அவள...வெட்றா அவள...."

இந்த பாட்டை அண்ணனும் தம்பியும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.

         திருவாளர் செல்வராகவன், உங்களுக்கு சோனியா அகர்வால் மேல கோபம் இருந்தால் அதை நீங்க பாட்டில சொன்ன மாதிரி  தனிப்பட்ட முறையில் தைரியம் இருந்தா  போய் செய்யுங்க  ... அதை விட்டுட்டு திரைப்படம் மூலமா தீத்துகிறது அவ்வளவா நல்லா இல்லை. திரைப்படம் என்பது அதை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தக்கூடியது.

          ஆண்கள் எல்லோருமே காதல் தோல்வியால் பாதிக்கபடுவதாக நீங்கள் நினைப்பதை திரைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அப்படி பார்த்தால் திருமணம் என்ற பெயரில் ஆண்கள் பெண்களுக்கு செய்யும் துரோகங்களுக்கு (பத்து keeps வைத்துகொள்வது, ஒருத்தி இருக்கும் போதே இன்னொருத்தியை திருமணம் செய்வது, தான் பெற்ற பிள்ளைகுட்டிகளை நடுத்தெருவில் நிற்க வைப்பது,  வரதட்சணை என்ற பெயரில் பெண்களை கொடுமைபடுத்துவது...) பெண்கள் எல்லாம் சேர்ந்து ஆண்களை

 "அடிடா அவன...உதடா அவன...வெட்றா அவன..." 
என்று கிளம்பட்டுமா...

       சுருக்கமாக சொல்ல போனால், இந்த படம் செல்வராகவனின் இன்றைய தேதிவரை உள்ள வாழ்க்கை வரலாறு. முதல் பாதி சோனியா அகர்வால் செல்வராகவனிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் ....மீதி பாதி கீதாஞ்சலி கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கிற ஆறுதல்கள்....போதுமா மக்களே....இதுதான் செல்வராகவனுடைய மயக்கமும்  குழப்பமும்....  





Thursday, 3 November 2011

Diwali Diyas and Crackers


Vela...Vela...Velayutham....Diwali Cracker




தீபாவளி வெடியான விஜய் யின் வேலாயுதம் பார்க்கலாம்...பார்க்கலாம்...பார்த்து பார்த்து ரசிக்கலாம்....

இந்த படத்தில் hero  introduction  scenes எல்லாம் நல்லாத்தான் இருந்தது. அந்த flow -லே படத்தை கொண்டுபோகாம வேட்டைக்காரன், சுறா படங்களை மாதிரி சம்பந்தமே இல்லாம ஒரு வில்லன் கதையை விஜய்க்காக வேண்டி எங்கிருந்துதான் உருவாக்கிறான்களோ தெரியவில்லை. முதல் சில காட்சிகளிலே  இருக்கிற இயல்பான சந்தோஷங்களையும் சிரிப்பையும் hero வும் தொலைத்து நம்மளையும் தொலைக்க வைக்கிறார். ஏன் அந்நியன் மாதிரி ஒரு கொலை வெறி...





கிராமத்து சேலை ஹன்சிகாவுக்கு நல்லாயிருக்கு. சரண்யா மோகனுடைய சிரிப்பும் விஜயின் சிரிப்பும் அழகாக match ஆகிறது. படத்தோட ஒட்டாத கதாபத்திரம் ஜெனிலியாதான். 


ஊர் உலகத்தில இருக்கிற தத்துவத்தை எல்லாம் சினிமா பாட்டிலே கேட்டாதான் நமக்கு அறிவு வரும்னு அந்த காலத்திலேயே பட்டுக்கோட்டையார் பாடிவச்சிருப்பார் போல. அதை விஜய் படத்தில மட்டும் தவறாம follow பண்றாங்க. ஆமா...ஆமா...நமக்கும் பழகிருச்சி...விட முடியவில்லை...  





               As  usual  music  and  dance  count...Kids craze for his movements and action in this film also.In this matter Vijay wont cheat. He fills out the needs of the producer, director and the audience. 
            Vijay ன்னா ஓடணும், சண்டை போடணும், டான்ஸ் ஆடணும், சட்டைக்கு மேல சட்டையா இரண்டு சட்டை போடணும் - இதெல்லாம் rules and regulations.

We like Vijay in Tata Docomo Ad than Jos Allukas. 

             
 Really a mass entertainer...





7am arivu......Diwali Diya



            Film with a different genre. Big hands to A R Murugadass for taking such an effort. The docu about Bodhidharma is etched out very well and Suriya suits very well.  The articles we read in net gives more info about this man.

             He could have include some more scenes of Bodhidharma. Because after seeing the legend on screen, the present generation hero is shown as a worthless one working in a circus company..hard to digest...We can be very well satisfied with Bodhidharma documentary instead of seeing a dummy replacement of the great man. 



                Sruthi Hassan replica of her father, Kamal Hassan in his youth - expressions, lively eyes, diction....Lots to improve...



                   Suriya looks good as the saint and martial arts expert. His postures, body language and his sedative and expressive eyes talks a lot as Bodhidharma. He again proves himself as a good actor.



               The Great Villain Johnny Tri Nguyen came all the way from Vietnam is good. He who gives the story a speedy move. Whatever effort the villain puts, the hero and heroine struggle to make an impact. The story fails to capture the audience in the second half. So many loop holes,  lacking focus on the plot, too much hype, borrowed Hollywood items like DNA, mind control, martial arts.... 

Not much impressive....           

Monday, 17 October 2011

கோ - The Real King




கோ படம் வந்த புதிதில் படம் நல்ல இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, எனக்கு அதை பாக்கணும்ன்னு தோணவே இல்லை.  காரணம் என்னவென்றால்,
  • ஜீவாவாலே strong character பண்ண முடியும் நான் நம்பவில்லை.
  • ஏதாவது ஒரு profession கையில்  எடுத்து அதை கடித்து குதறுவதை சில டைரக்டர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ( காக்கி சட்டையை என்ன பாடுபடுத்துகிறார்கள் )


 நிறைய recommendationsக்கு பிறகு ரொம்ப லேட்டாக (அதுக்காக 5 மாதம் எல்லாம் ரொம்ப ஓவர் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...சரி, சரி...விடுங்கள்...) பார்த்தேன்.





இந்த கதைக்காகவும், photojournalism என்கிற தொழிலை வெகு  லாவகமாக கையாண்டதற்கும்,  இதை இயக்கிய விதத்திற்காகவும்   டைரக்டர் கே வி ஆனந்துக்கு "கோ" பட்டம் கொடுக்கலாம். யாரையுமே overact பண்ணவிடாம balance பண்ணி இருக்கிறார். முக்கியமாக ஜீவாவையும் பிரகாஷ் ராஜையும்....
அடுத்தது ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக்....its a hit...


டைரக்டர் K V Anand




நம்ம heros கதைக்கு வருவோம். இந்த படத்தில்தான் ஜீவா சரியாக, casual ஆக, பாத்திரத்திற்கு தகுந்தார் போல் நடித்திருக்கிறார். இரண்டு heroines கிட்டேயும் ஒரே மாதிரி look கொடுக்காமல், வித்தியாசப்படுத்தியிருக்கார். நிறைய  ஹிரோகள் செய்யிற தப்பு அதுதான். கடைசியில் 'நான் உன்னை லவ் பண்ணல்ல...அவளத்தான் லவ் பண்ணினேன்...'என்று சொல்லி நம்மையும் சேர்த்து குழப்புவார்கள்.....





அடுத்தது அஜ்மல்... பெரும்பாலும் character names எல்லாம் என் தலையில் நிக்கவே நிக்காது...ஆனால்  வசந்தன் என்கிற character  nameயை பதிய வைத்திருக்கிறார். அந்த character யை  அழகாகவும் தோரணையோடும்  செய்திருக்கிறார். 





கார்த்திகா அவங்க அம்மா ராதாவை போல் நல்ல உயரம்,  அதே முகஜாடை. ராதாவுக்கு நடிக்க தெரியாது, நளினம் கிடையாது, வெறும் celluloid பொம்மைதான் , ஆனால்  கார்த்திகா ஒகே.
Spring hair பியா பரவாயில்லை. எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிப்பு பாணி தெரியுது. மாத்திக்கலாம்.


கதையோட க்ளைமாக்ஸ் தான் உண்மையான ஹீரோ. 


மீடியா, பத்திரிகைகள் எல்லாம் இன்று உண்மையை தொலைத்து, creativity என்ற பெயரில் கற்பனையாகவும் கட்டு கதைகளாகவும் எழுதுவது மட்டும் அல்லாமல், paid news போன்றவற்றையும் செய்யும் போது, ஜர்னலிசத்தின் மூலம் நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியும் என்று காட்டபட்டிருக்கிறது.  


அரசியல், காவல் துறை, மிலிடரி  போன்றவற்றில் இருப்பவர்கள் மட்டுமே நாட்டுக்கு நல்லது  செய்வதாக அனேக படங்களில் பார்த்திருக்கிறோம். நாம் சாதாரணமாக நினைக்கும் போடோக்ராபர் மற்றும் ஜர்னலிஸ்ட் தொழிலில் இருப்பவர்கள்கூட நாட்டுக்காக தன் அர்ப்பணிப்பை அளிக்க முடியும் என்று அழகாக உணர்த்தியிருக்கிறார்கள்.


இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்புகிறோம்.  இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு பழைய கிழ பெருச்சாளிகளை, வாரிசு அரசியலை  ஒழித்து, நல்ல ஜனநாயகம் நாம் நாட்டுக்கு அமையாதா என்று கூட தோன்றுகிறது.


Really the word கோ means  







Saturday, 15 October 2011

Chocolaty Boy and Charming Girl





Melodious music, dandling dancers and amazing places behind make this song dazzling and pleasurable....

Thursday, 28 July 2011

ஆரண்ய காண்டம்


ஆரண்ய காண்டம்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ நம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தை கொடுத்திருக்கிறது. அவருடைய முதல் படம் இதுதான் என்பது ஒரு ஆச்சரியம். பிற மொழிகளில் இருந்து சுட்ட கதை என்பது தெளிவாக தெரிந்தாலும் கதை கோர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.

Director Thiagarajan Kumararaja

 இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், போதை மருந்து விற்கும் கும்பலை பற்றியது. அந்த கும்பலில் இருக்கும் கொஞ்சம் நல்ல மனம் படைத்தவர்கள், நிறைய கெட்ட குணம் உடையவர்கள், இந்த கும்பலை சேராத வாழ்ந்து நொடிந்து போன ஒரு தகப்பனும் மகனும், கும்பலின் தலைவனிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அபலை பெண், அவளால் மையலில் பிறகு துப்பாக்கியால் விழ்த்தபடும் ஒன்றும் அறியாதவனாய் காட்டப்படும் ஒரு வாலிபன் இவர்கள்தான் கதையை நிர்ணயிக்கிறவர்கள்.

இந்த கதை, அது நடைபெறுவதாக காட்டப்படும் களம், அதில் நடைபெறும் தூப்பாக்கி சண்டைகள், வன்முறைகள், ஆபாசமான வசனங்கள் அனைத்துமே நம் மண்ணிற்கு சொந்தமானது இல்லை. பலதரப்பட்ட வட்ட வட்டமான DVD-களில் இருந்து copy அடிக்கப்பட்டவை. Mexican Hat மட்டும்தான் missing....



பரவாயில்லை... படம் பண்ணியவர்களை மன்னிக்கலாம்....எதற்காக என்றால்,
  •        தமிழ் சினிமாவிற்கு இந்த களம் புதிது. துணிந்து இந்த கதையை படமாக்கியதற்கு SP Charan க்கு பாராட்டுகள்.
  •       தியாகராஜன் குமார ராஜாவை சும்மா சொல்ல கூடாது. நிறைய தைரியம் வேண்டும் நம் தமிழ் சினிமாவில் ஒரு ஆணை நிர்வாணமாக காண்பிப்பதற்கு.தமிழ் நடிகர்களை அப்படி காண்பிக்க முடியாத கட்டாயதால்தான் ஜாக்கி ஷேராப்பை இறக்குமதி செய்திருக்கிறார் போல. MGR தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை கேமராவுக்கு காட்டும் விதம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இப்படி நம் சினிமாவில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்த பெண்ணை மட்டுமே அரை நிர்வாணமாக்கி காட்டும் Gender Bias இனியாவது சற்று ஒழியும் என்று நம்புவோம்.
  •        கிளைக்கதைகள் நிறைய இருந்தாலும் அதை கோர்த்திருக்கும் முறை அருமை.
  •  இதில் ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் சம்பத் ராஜ், நொடிந்துபோன ஜமிந்தாராக வரும் சோமசுந்தரம், அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் ஆகியோருடன் மட்டுமே நம்மால் கதையோடு ஒன்றி போக முடிகிறது.
  •   சமுதாயத்திற்கு கேடு செய்பவர்களிடத்தும் நல்லதும் கெட்டதும் உண்டு என்றும் அதிலேயும் கெட்டவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் சொல்லபட்டிருக்கிறது.


24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு போதைமருந்து விற்கும் கும்பலில் நடக்கும் கதையாக கண்பிக்கபட்டாலும் அதில் விறுவிறுப்புக்காக வன்முறையை அளவுக்கதிகமாக சேர்த்திருக்கிறார்கள். ஆபாச வசனங்களையும் சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி its a good attempt and as usual the debut film becomes a master piece.....