Sunday 26 June 2011

Avan Ivan - A Rustic Movie

அவன் இவன்



Director Bala  :
                         


                     படம் காமெடி என்றுதான் எங்களுக்கு பேட்டிகளில் சொல்லி இருக்கீங்க. ஆனால் படம் முழுக்க ஒரு strain தெரியுது. அது காமெடி ஆகட்டும், சீரியஸ் சீன் ஆகட்டும் கஷ்டப்பட்டு படம் பண்ணியதும், எங்களை கஷ்டப்படுத்தி படம் பார்க்க வைத்திருப்பதும் தெரியுது. விஷாலையும் ஆர்யாவையும் கூட ரொம்ப படாபடுத்தி இருக்கிறார். அவர்கள் இருவரும் casual ஆக நடிக்கவே இல்லை. 



GM Kumar :




                      படத்தில் அழகாக, அமைதியாக நடித்திருப்பவர் GM Kumar மட்டும்தான். அவருடைய hair style அந்த கதாபாத்திரத்திற்கு suit ஆகிறது. 


Movie :

                     படத்தில் பாட்டு நல்லா இருக்கு. விஷாளோட squint eyes நல்லா இருக்கு.  விஷால் ஆடுற முதல் டான்ஸ் நல்லா இருக்கு. ஆர்யா இந்த படத்தில் பரவாயில்லை.
                    படத்தில் வரும் கதாநாயகி ஜனனி ஐயர் பரவாயில்லை. நடிக்க தெரிந்திருக்கிறது. 
                     படம் ரொம்ப rustic , அழுக்காகவும்,  அலங்கோலமாகவும் இருக்கிறது. முதல்ல வர்ற இரண்டு காட்சிகளில் வரும் வசனங்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
                    விஷால் சில சமயங்களில் உச்சரிக்கும் ' Highness' என்னும் வார்த்தை convent english உச்சரிப்பில் இருக்கிறது.
                    பொம்பளைகளை முக்கால் நிர்வாணமாக காண்பித்து முடித்து விட்டார்கள். இப்போது ஆண்களின் turn... அவர்களை முழு நிர்வாணமாக பார்த்து தொலைக்கவேண்டிய கட்டாயம் நமக்கு. காட்சிக்கு தேவையாக இருந்தாலும், its an embracing scene...


                    மொத்தத்தில் அவனும் நல்லா இல்ல....இவனும் நல்லா இல்ல...
இல்ல பாக்கிற நாம தான் நல்லா இல்லையான்னு தெரியல்ல...







Saturday 25 June 2011

பாடலின் இனிமை

                        சில பாடல்களை பாடிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும். அன்று முழுவதும் அந்த பாட்டையே முணுமுணுத்துக் கொண்டே இருப்போம். அதில் ஒன்றுதான் நாணயம் பட பாடல் 'நான் போகிறேன் மேலே மேலே..'






                          இந்த பாடல் காட்சியும் ஒரு அழகான கவிதை போல்...பிரசன்னா ஓகே...அந்த கதாநாயகி - பெயர் தெரியவில்லை - not ok... But அந்த white and red dress ரொம்ப அழகு...அந்த பாடல் காட்சிக்கு நல்லா பொருத்தமாக இருந்தது....