Showing posts with label விமரிசனம். Show all posts
Showing posts with label விமரிசனம். Show all posts

Tuesday, 19 February 2013

விஸ்வரூபம்





இந்த படம் பண்ணிய பிரச்னை எல்லோரும் அறிந்ததே. அப்படி ஒன்றும் இதில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 

வெறும் பேப்பரில், டிவியில் மற்ற மீடியாக்களில் வந்த ஆப்கானிஸ்தான் பற்றிய விவரங்களை சேகரித்து கோடிக் கணக்கில் கொட்டியதாக(?) சொல்லி படம் பண்ணி வியாபாரம் செய்ய வழி தேடி கடைசியில் அம்மாவுடன் under table dealing பண்ணி சமர்த்தாக படத்தை விற்றுவிட்ட சந்தோஷம் கமலஹாசனின் முகத்தில் தெரிந்தால் அது ஆச்சிரியபடுவதற்கு இல்லை. 



இதில் ஏமாந்தவர்கள் கமலின் ரசிகர்கள் தான். படத்தை பார்க்க ப்ளைட் பிடித்து ட்ரெயின் பிடித்து அடுத்த மாநிலத்துக்கு எல்லாம் போய் காசை செலவழித்து இந்த ஒன்றுமே இல்லாத டாகுமெண்டரி படத்தை பார்க்க போன அவர்களை சொல்லணும். படத்தில் ஒன்றுமில்லை என்பது தெரிந்தவுடன் ஆஹா..ஓஹோ ...என்று பொய்யாய் பிரசாரம் செய்து மனச் சமாதானப்பட்டுக் கொண்டார்கள். பாவம் தான்....அடுத்த முறை சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள். நம்புவோம்.....



நான் இப்படி எழுதுவதற்காக, 'அறிவு ஜீவிகளுக்கு தான் புரியும் இந்த கதை' என்கிற கதையெல்லாம் இங்கு வேண்டாம். நாலு இங்கிலீஷ் படத்தையும் ஐந்து சத்யஜித் ரே படத்தையும் பார்த்தவன் தான் அறிவுஜீவி என்றால் நாங்களும்  அந்த மாதிரி நாற்பது படம் பார்த்துவிட்டுதான் இதை எழுதுகிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

கமல் முத்திரையுடன் ஒரு படம் வந்தால் அது அறிவுஜீவிகளுக்கானது தான் என்று யார் சொன்னது?.... 

எடுத்தவுடன் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் பிராமண பாஷையை பேசி மற்ற தமிழர்கள் யாரும்  அமெரிக்காவில் வசிக்கவே தகுதியில்லாதவர்கள் என்பது மாதிரி காட்டியிருக்கிறார்கள். வன்மையாக கண்டிக்கதக்க ஒரு விஷயம் இது. சொல்லப் போனால் இந்த படத்தை எதிர்த்து இதுக்கு தான் போராடியிருக்கணும்.

ஒரு படத்துல காசு வாங்காம, இல்ல.. கொஞ்ச சீனுல மட்டும் வந்து போறவங்களை ஏதோ சொல்லுவாங்களே....ஆங்...Guest Appearance... அந்த மாதிரி கமல் இந்த படத்துல....சுத்தமா நடிக்கவே இல்லை...

ஒரு போராளி கூட்டத்துக்குள்ளே வேவு பார்க்க போகிறவன் எந்த மாதிரி இருப்பான்னு தெரியாத அளவுக்கு நம்ம பொது ஜனத்துக்கு அறிவில்லாம இல்ல. ஏதோ நம்ம ஊரு ஜனாதிபதி வெளிநாடு சுற்று பயணம் போவாருல்ல அந்த மாதிரி கமல் அங்கே போனவுடன் அந்த கூட்டத்தில இருக்கிறவங்க இவரை வரவேற்கிறதென்ன சுத்தி காமிக்கிறதென்ன....ரொம்ப காதுல பூ சுத்தாதீங்க கமல் சார்......



ஒரே விஷயத்தை மட்டும் கமல் இந்த படத்தில மீண்டும் நிருபிச்சிருக்கார். அது என்னன்னா டான்ஸ்...பிஜூ மகாராஜ் அவர்களின் துணையோடு அழகாக ஆடியிருக்கிறார். அதுக்காக இவ்வளவுவுவுவு.....நீள பாட்டு வேணுமா....




இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசப்படுவது ஆண்ட்ரியா மட்டுமே. அழகாகவும் இருக்கிறார். அளவாகவும் நடித்திருக்கிறார். 

வேற எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை...

இந்த மாதிரி ஒரு சாதாரண படத்துக்கு இனி யாராவது பந்தா பண்ணினா அதுக்கு எதிரா நாம தான் விஸ்வரூபம் எடுக்கணும்...


Monday, 17 October 2011

கோ - The Real King




கோ படம் வந்த புதிதில் படம் நல்ல இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, எனக்கு அதை பாக்கணும்ன்னு தோணவே இல்லை.  காரணம் என்னவென்றால்,
  • ஜீவாவாலே strong character பண்ண முடியும் நான் நம்பவில்லை.
  • ஏதாவது ஒரு profession கையில்  எடுத்து அதை கடித்து குதறுவதை சில டைரக்டர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ( காக்கி சட்டையை என்ன பாடுபடுத்துகிறார்கள் )


 நிறைய recommendationsக்கு பிறகு ரொம்ப லேட்டாக (அதுக்காக 5 மாதம் எல்லாம் ரொம்ப ஓவர் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...சரி, சரி...விடுங்கள்...) பார்த்தேன்.





இந்த கதைக்காகவும், photojournalism என்கிற தொழிலை வெகு  லாவகமாக கையாண்டதற்கும்,  இதை இயக்கிய விதத்திற்காகவும்   டைரக்டர் கே வி ஆனந்துக்கு "கோ" பட்டம் கொடுக்கலாம். யாரையுமே overact பண்ணவிடாம balance பண்ணி இருக்கிறார். முக்கியமாக ஜீவாவையும் பிரகாஷ் ராஜையும்....
அடுத்தது ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக்....its a hit...


டைரக்டர் K V Anand




நம்ம heros கதைக்கு வருவோம். இந்த படத்தில்தான் ஜீவா சரியாக, casual ஆக, பாத்திரத்திற்கு தகுந்தார் போல் நடித்திருக்கிறார். இரண்டு heroines கிட்டேயும் ஒரே மாதிரி look கொடுக்காமல், வித்தியாசப்படுத்தியிருக்கார். நிறைய  ஹிரோகள் செய்யிற தப்பு அதுதான். கடைசியில் 'நான் உன்னை லவ் பண்ணல்ல...அவளத்தான் லவ் பண்ணினேன்...'என்று சொல்லி நம்மையும் சேர்த்து குழப்புவார்கள்.....





அடுத்தது அஜ்மல்... பெரும்பாலும் character names எல்லாம் என் தலையில் நிக்கவே நிக்காது...ஆனால்  வசந்தன் என்கிற character  nameயை பதிய வைத்திருக்கிறார். அந்த character யை  அழகாகவும் தோரணையோடும்  செய்திருக்கிறார். 





கார்த்திகா அவங்க அம்மா ராதாவை போல் நல்ல உயரம்,  அதே முகஜாடை. ராதாவுக்கு நடிக்க தெரியாது, நளினம் கிடையாது, வெறும் celluloid பொம்மைதான் , ஆனால்  கார்த்திகா ஒகே.
Spring hair பியா பரவாயில்லை. எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிப்பு பாணி தெரியுது. மாத்திக்கலாம்.


கதையோட க்ளைமாக்ஸ் தான் உண்மையான ஹீரோ. 


மீடியா, பத்திரிகைகள் எல்லாம் இன்று உண்மையை தொலைத்து, creativity என்ற பெயரில் கற்பனையாகவும் கட்டு கதைகளாகவும் எழுதுவது மட்டும் அல்லாமல், paid news போன்றவற்றையும் செய்யும் போது, ஜர்னலிசத்தின் மூலம் நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியும் என்று காட்டபட்டிருக்கிறது.  


அரசியல், காவல் துறை, மிலிடரி  போன்றவற்றில் இருப்பவர்கள் மட்டுமே நாட்டுக்கு நல்லது  செய்வதாக அனேக படங்களில் பார்த்திருக்கிறோம். நாம் சாதாரணமாக நினைக்கும் போடோக்ராபர் மற்றும் ஜர்னலிஸ்ட் தொழிலில் இருப்பவர்கள்கூட நாட்டுக்காக தன் அர்ப்பணிப்பை அளிக்க முடியும் என்று அழகாக உணர்த்தியிருக்கிறார்கள்.


இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்புகிறோம்.  இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு பழைய கிழ பெருச்சாளிகளை, வாரிசு அரசியலை  ஒழித்து, நல்ல ஜனநாயகம் நாம் நாட்டுக்கு அமையாதா என்று கூட தோன்றுகிறது.


Really the word கோ means  







Thursday, 28 July 2011

ஆரண்ய காண்டம்


ஆரண்ய காண்டம்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ நம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தை கொடுத்திருக்கிறது. அவருடைய முதல் படம் இதுதான் என்பது ஒரு ஆச்சரியம். பிற மொழிகளில் இருந்து சுட்ட கதை என்பது தெளிவாக தெரிந்தாலும் கதை கோர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.

Director Thiagarajan Kumararaja

 இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், போதை மருந்து விற்கும் கும்பலை பற்றியது. அந்த கும்பலில் இருக்கும் கொஞ்சம் நல்ல மனம் படைத்தவர்கள், நிறைய கெட்ட குணம் உடையவர்கள், இந்த கும்பலை சேராத வாழ்ந்து நொடிந்து போன ஒரு தகப்பனும் மகனும், கும்பலின் தலைவனிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அபலை பெண், அவளால் மையலில் பிறகு துப்பாக்கியால் விழ்த்தபடும் ஒன்றும் அறியாதவனாய் காட்டப்படும் ஒரு வாலிபன் இவர்கள்தான் கதையை நிர்ணயிக்கிறவர்கள்.

இந்த கதை, அது நடைபெறுவதாக காட்டப்படும் களம், அதில் நடைபெறும் தூப்பாக்கி சண்டைகள், வன்முறைகள், ஆபாசமான வசனங்கள் அனைத்துமே நம் மண்ணிற்கு சொந்தமானது இல்லை. பலதரப்பட்ட வட்ட வட்டமான DVD-களில் இருந்து copy அடிக்கப்பட்டவை. Mexican Hat மட்டும்தான் missing....



பரவாயில்லை... படம் பண்ணியவர்களை மன்னிக்கலாம்....எதற்காக என்றால்,
  •        தமிழ் சினிமாவிற்கு இந்த களம் புதிது. துணிந்து இந்த கதையை படமாக்கியதற்கு SP Charan க்கு பாராட்டுகள்.
  •       தியாகராஜன் குமார ராஜாவை சும்மா சொல்ல கூடாது. நிறைய தைரியம் வேண்டும் நம் தமிழ் சினிமாவில் ஒரு ஆணை நிர்வாணமாக காண்பிப்பதற்கு.தமிழ் நடிகர்களை அப்படி காண்பிக்க முடியாத கட்டாயதால்தான் ஜாக்கி ஷேராப்பை இறக்குமதி செய்திருக்கிறார் போல. MGR தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை கேமராவுக்கு காட்டும் விதம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இப்படி நம் சினிமாவில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்த பெண்ணை மட்டுமே அரை நிர்வாணமாக்கி காட்டும் Gender Bias இனியாவது சற்று ஒழியும் என்று நம்புவோம்.
  •        கிளைக்கதைகள் நிறைய இருந்தாலும் அதை கோர்த்திருக்கும் முறை அருமை.
  •  இதில் ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் சம்பத் ராஜ், நொடிந்துபோன ஜமிந்தாராக வரும் சோமசுந்தரம், அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் ஆகியோருடன் மட்டுமே நம்மால் கதையோடு ஒன்றி போக முடிகிறது.
  •   சமுதாயத்திற்கு கேடு செய்பவர்களிடத்தும் நல்லதும் கெட்டதும் உண்டு என்றும் அதிலேயும் கெட்டவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் சொல்லபட்டிருக்கிறது.


24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு போதைமருந்து விற்கும் கும்பலில் நடக்கும் கதையாக கண்பிக்கபட்டாலும் அதில் விறுவிறுப்புக்காக வன்முறையை அளவுக்கதிகமாக சேர்த்திருக்கிறார்கள். ஆபாச வசனங்களையும் சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி its a good attempt and as usual the debut film becomes a master piece.....