Showing posts with label movie review. Show all posts
Showing posts with label movie review. Show all posts

Saturday, 30 January 2016

இளமை ஊஞ்சலாடுகிறது..

மீண்டும்..



டீன் ஏஜ்ஜில் ஒரு திரைப்படத்தை உள்வாங்கியதற்கும் இப்போது நாற்பதுகளில் உள்வாங்குவதற்கும் வித்தியாசம் அதிகமிருக்கிறது.

அனுபவங்கள் அதிகமில்லாத அந்த வயதில், ஜெயகாந்தனின் கதைகளுக்குள் தலையை உருட்டிக் கொண்டிருந்தாலும், காதலை மறுக்கும் எந்த வாதமும் எதிர்ப்பாகவே மனதில் பதிந்தது எனலாம்.

காதலை உடல் ரீதியாக யோசித்தறியா வயது அது. தெய்வீகம் என்னும் வார்த்தையை காதலுடன் சேர்த்து பார்த்த வயது. என் கல்லூரி தோழி ஒருத்தி எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்ப அட்வான்ஸ். படகின் மறைவில் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக அவளுடன் பேசாமல் அவளை நட்பில் இருந்து ஒதுக்கிவைத்த காலம் அது.

அந்த காலகட்டத்தில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் தோழிகளுக்குள் அலசியிருக்கிறோம்.

நாயகன், நாயகி தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் மோகம் கொண்டவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், காதலில் உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது உண்மை இல்லையா என்பது போன்ற கேள்விகளும் அதனால் கதானாயகனாய் நடித்த கமலை பிடிக்காமல் போனதும் என்று நிறைய விஷயங்கள் தர்க்க ரீதியாகவும் அலசப்பட்டு இருந்தது எங்களுக்குள். ( அந்த காலத்தில் ஆண்கள் மட்டும் அறிவாளிகள் இல்லை, பெண்களும்தான்..ஆனால் அவர்கள் அளவுக்கு எங்களால் அப்போது வெளிவர முடியவில்லை என்பதை இப்போதும் தோழிகள் நாங்கள் யோசிப்பதுண்டு. )

காதலும் மோகமும் வேறு வேறு என்பதை பிரித்தறியா காலம் அது. அவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறே என்று சொன்ன திரைப்படம் அது. அப்போது அதை ஏற்கும் மனநிலை இல்லை எங்களுக்குள். ஆனால், புதிதாய் ஒரு பார்வை காதலுக்குக் கொடுத்தது அந்த திரைப்படம் எனலாம்.

உடல் ரீதியான விஷயங்களுக்கு காதல் மட்டுமல்ல, சூழலும் இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியான பழக்கமும் காரணங்கள் எனவும் புதிதான ஒரு பார்வை அந்த திரைப்படம் காட்டியிருக்கிறது. காதலற்று ஒரு உறவு உண்டாவதும், காதலுடன் நாயகி உறவுக்காய் காத்திருப்பதும், ஏற்றுக் கொள்வதும் திரைக்கதையின் போக்கை புதிதாய் புரிய வைக்க முயற்சித்திருக்கிறது.

இதை அந்த காலத்தில் ஒரு முயற்சியாக ஸ்ரீதர் இயக்கினாரா என்பது தெரியவில்லை. ஆனால், அதை ரசிகர்கள் ஜனரஞ்சகமான ஒரு திரைப்படமாகவே பார்த்தார்கள் என்பது மட்டுமே உறுதி. அதை 175 நாட்கள் ஓட்டி வெற்றி படமாக்கியதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

சமூகம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லாதபோது சொல்லப்படும் சில விஷயங்கள் சமூக கட்டுகள் சற்று தளரும் சமயங்களிலேயே புரியப்படுகிறது.

ம்ம்..மீண்டுமாய் ஒர் இளமை ஊஞ்சலாடுகிறது..



Sunday, 16 December 2012

நீர்ப்பறவை - ஓர் அலசல்...





Cast : Vishnu, Sunaina, Nanditha Das, Samuthra Kani
Director : Seenu Ramasamy
Producer : Uthayanidhi Stalin
Music : N R Ragunanthan

நீர்ப்பறவை என்பது Gull (Sea Gull) இன்னும் பறவையை குறிக்கும். அந்த பறவை ரொம்ப அறிவாகவும் கூட்டமைப்பான வாழ்வு முறைகளையும் பின்பற்றக்கூடியது என்று கேள்விபட்டிருக்கிறேன். 

ஆனால் இந்த படத்தில் அந்த பறவையின்  அறிவாளித்தனத்தை காணவில்லை. அந்த மீனவ மக்களின் வாழ்வியல் மட்டும் அழகாக காட்டப்பட்டுள்ளது. 



இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு...சரியாகவே கதாபாத்திரத்துக்குள் ஒட்டவேயில்லை. இந்த மாதிரி படங்களில் யதார்த்தமாய் நடிக்கவேண்டும். வேறு நடிகரை தேர்ந்தெடுத்திருக்கலாம். 

குடிகாரனாய் வரும் காட்சிகளில் மனதில் நிற்கவேயில்லை. அவருடைய அம்மா, அப்பாவாக வருபவர்கள் மட்டுமே நம் கவனத்தில். 



நேர் எதிர்பதமாக நம் கதாநாயகி சுனைனா சூப்பர்.  சரியான தேர்வு.பெரும்பாலும் இந்த மாதிரி costumeயில் ஹீரோயின்  அழகாக தெரியமாட்டார். சுனைனா அழகாகவும் இருக்கிறார். யதார்த்தமாய் நடித்தும் இருக்கிறார்.    



மற்ற எல்லோரும் படத்தின் தன்மை அறிந்து செய்திருக்கிறார்கள். சமுத்திர கனி சாட்டை படத்திற்கு அப்புறம் இதில். அளவாய் கண்ணிலே கண்ணியம் காட்டியிருக்கிறார். 



நந்திதா தாஸ் எல்லோரையும் விட ஒரு பிடி அதிகமாகவே செய்திருக்கிறார். இந்த மாதிரி நிறைய படம் செய்த அனுபவம் தெரிகிறது.

மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களின் கிறிஸ்துவ சமய சார்பையும் அளவாக எடுத்துரைத்திருக்கிறார் டைரக்டர். அதுவும் பாதிரியாரின் பேச்சுக்கு கட்டுப்படுதல் போன்ற விஷயங்கள் கூட மிகைப்படுத்தாமல் காட்டப்பட்டுள்ளது.



தகப்பனும் தாயும் சேர்ந்து இலங்கை ராணுவத்தால் சுடப்பட்ட தன் மகனின் உடலை தங்களுடன் வைத்து கொள்ள வேண்டி தன் வீட்டிலேயே புதைத்து வைப்பது எல்லாமே நடைமுறை சாத்தியம். அந்த பாசம் நிஜம் என்பதை நம் கண்ணில் இருந்து வரும் ஒரு துளி நீர் சாட்சி.


கண்ணில் தப்பாய் பட்டவை : 


பாடல்கள் எல்லாமே ஏதோ திருசபை கூட்டத்திலிருந்து ரகுநந்தன் எழுந்து வந்த மாதிரி தேவதூதனின் துதியாய் இருக்கிறது. திகட்டுகிறது. ஒரு மதம் சார்ந்த மக்களை வைத்து படம் பண்ணும் போது அணைத்து பாடல்களுமே அந்த மதம் சார்ந்த இசையின் அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.   

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் தன்மை சமீப காலமாய் அதிகரித்துவருகிறது. நல்லதுதான். 

வழக்கு எண் 18/9 படமே முதல் தடவை பார்க்கும் போது புரியாத மாதிரியும் இரண்டாம் முறையே புரிந்ததாகவும் என் தோழிகள் சிலர் சொன்னார்கள்.  

அதற்கு காரணம் எல்லா சஸ்பென்சையும் கடைசி நேரத்தில் அவிழ்க்க நினைப்பது. அதற்கு சீன் continuity தேவையாகிறது. அப்போது repetition ஆகிறது சில காட்சிகள். அதுவும் இல்லாமல் முதலில் இருந்து புரியாமலே ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைசியில் தான் புரிகிறது. தியேட்டர் விட்டு வரும் போது நம் தலையில் ஏதோ பாரம் ஏத்தி வைத்தது போல் தோன்றும். 

சரி அந்த படத்தை விடுவோம். இதிலும் அதே தப்பைதான் செய்திருக்கிறார்கள். ஏதோ கதாநாயகியே கொலை செய்தது போலும் அவள் என்ன காரணம் சொல்வாள் என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டு வேறு மாதிரி முடித்துவிட்டார்கள். 

இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?....
டைரக்டர் படத்தில் முக்கியமாக இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டு தள்ளுவதை பற்றி சொல்ல வந்து, அதற்காக ஒரு கோர்ட் சீனும் வைத்து, ஆனால் அதை இந்த சஸ்பென்ஸ் விஷயத்தால் சப்பென்று ஆக்கிவிட்டார். சொதப்பிவிட்டார். 

இனிமேல் நிஜ விஷயங்களை படம் எடுப்பவர்கள் இந்த தப்பை செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோம். 

Thursday, 28 July 2011

ஆரண்ய காண்டம்


ஆரண்ய காண்டம்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ நம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தை கொடுத்திருக்கிறது. அவருடைய முதல் படம் இதுதான் என்பது ஒரு ஆச்சரியம். பிற மொழிகளில் இருந்து சுட்ட கதை என்பது தெளிவாக தெரிந்தாலும் கதை கோர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.

Director Thiagarajan Kumararaja

 இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், போதை மருந்து விற்கும் கும்பலை பற்றியது. அந்த கும்பலில் இருக்கும் கொஞ்சம் நல்ல மனம் படைத்தவர்கள், நிறைய கெட்ட குணம் உடையவர்கள், இந்த கும்பலை சேராத வாழ்ந்து நொடிந்து போன ஒரு தகப்பனும் மகனும், கும்பலின் தலைவனிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அபலை பெண், அவளால் மையலில் பிறகு துப்பாக்கியால் விழ்த்தபடும் ஒன்றும் அறியாதவனாய் காட்டப்படும் ஒரு வாலிபன் இவர்கள்தான் கதையை நிர்ணயிக்கிறவர்கள்.

இந்த கதை, அது நடைபெறுவதாக காட்டப்படும் களம், அதில் நடைபெறும் தூப்பாக்கி சண்டைகள், வன்முறைகள், ஆபாசமான வசனங்கள் அனைத்துமே நம் மண்ணிற்கு சொந்தமானது இல்லை. பலதரப்பட்ட வட்ட வட்டமான DVD-களில் இருந்து copy அடிக்கப்பட்டவை. Mexican Hat மட்டும்தான் missing....



பரவாயில்லை... படம் பண்ணியவர்களை மன்னிக்கலாம்....எதற்காக என்றால்,
  •        தமிழ் சினிமாவிற்கு இந்த களம் புதிது. துணிந்து இந்த கதையை படமாக்கியதற்கு SP Charan க்கு பாராட்டுகள்.
  •       தியாகராஜன் குமார ராஜாவை சும்மா சொல்ல கூடாது. நிறைய தைரியம் வேண்டும் நம் தமிழ் சினிமாவில் ஒரு ஆணை நிர்வாணமாக காண்பிப்பதற்கு.தமிழ் நடிகர்களை அப்படி காண்பிக்க முடியாத கட்டாயதால்தான் ஜாக்கி ஷேராப்பை இறக்குமதி செய்திருக்கிறார் போல. MGR தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை கேமராவுக்கு காட்டும் விதம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இப்படி நம் சினிமாவில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்த பெண்ணை மட்டுமே அரை நிர்வாணமாக்கி காட்டும் Gender Bias இனியாவது சற்று ஒழியும் என்று நம்புவோம்.
  •        கிளைக்கதைகள் நிறைய இருந்தாலும் அதை கோர்த்திருக்கும் முறை அருமை.
  •  இதில் ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் சம்பத் ராஜ், நொடிந்துபோன ஜமிந்தாராக வரும் சோமசுந்தரம், அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் ஆகியோருடன் மட்டுமே நம்மால் கதையோடு ஒன்றி போக முடிகிறது.
  •   சமுதாயத்திற்கு கேடு செய்பவர்களிடத்தும் நல்லதும் கெட்டதும் உண்டு என்றும் அதிலேயும் கெட்டவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் சொல்லபட்டிருக்கிறது.


24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு போதைமருந்து விற்கும் கும்பலில் நடக்கும் கதையாக கண்பிக்கபட்டாலும் அதில் விறுவிறுப்புக்காக வன்முறையை அளவுக்கதிகமாக சேர்த்திருக்கிறார்கள். ஆபாச வசனங்களையும் சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி its a good attempt and as usual the debut film becomes a master piece.....







Sunday, 26 June 2011

Avan Ivan - A Rustic Movie

அவன் இவன்



Director Bala  :
                         


                     படம் காமெடி என்றுதான் எங்களுக்கு பேட்டிகளில் சொல்லி இருக்கீங்க. ஆனால் படம் முழுக்க ஒரு strain தெரியுது. அது காமெடி ஆகட்டும், சீரியஸ் சீன் ஆகட்டும் கஷ்டப்பட்டு படம் பண்ணியதும், எங்களை கஷ்டப்படுத்தி படம் பார்க்க வைத்திருப்பதும் தெரியுது. விஷாலையும் ஆர்யாவையும் கூட ரொம்ப படாபடுத்தி இருக்கிறார். அவர்கள் இருவரும் casual ஆக நடிக்கவே இல்லை. 



GM Kumar :




                      படத்தில் அழகாக, அமைதியாக நடித்திருப்பவர் GM Kumar மட்டும்தான். அவருடைய hair style அந்த கதாபாத்திரத்திற்கு suit ஆகிறது. 


Movie :

                     படத்தில் பாட்டு நல்லா இருக்கு. விஷாளோட squint eyes நல்லா இருக்கு.  விஷால் ஆடுற முதல் டான்ஸ் நல்லா இருக்கு. ஆர்யா இந்த படத்தில் பரவாயில்லை.
                    படத்தில் வரும் கதாநாயகி ஜனனி ஐயர் பரவாயில்லை. நடிக்க தெரிந்திருக்கிறது. 
                     படம் ரொம்ப rustic , அழுக்காகவும்,  அலங்கோலமாகவும் இருக்கிறது. முதல்ல வர்ற இரண்டு காட்சிகளில் வரும் வசனங்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
                    விஷால் சில சமயங்களில் உச்சரிக்கும் ' Highness' என்னும் வார்த்தை convent english உச்சரிப்பில் இருக்கிறது.
                    பொம்பளைகளை முக்கால் நிர்வாணமாக காண்பித்து முடித்து விட்டார்கள். இப்போது ஆண்களின் turn... அவர்களை முழு நிர்வாணமாக பார்த்து தொலைக்கவேண்டிய கட்டாயம் நமக்கு. காட்சிக்கு தேவையாக இருந்தாலும், its an embracing scene...


                    மொத்தத்தில் அவனும் நல்லா இல்ல....இவனும் நல்லா இல்ல...
இல்ல பாக்கிற நாம தான் நல்லா இல்லையான்னு தெரியல்ல...