Showing posts with label sundarapandian movie review. Show all posts
Showing posts with label sundarapandian movie review. Show all posts

Tuesday, 25 September 2012

சுந்தரபாண்டியன்....

கலக்கல் பாண்டியன்....



படத்தின் பயோடேட்டா :
இயக்குனர் : பிரபாகரன்
இசை : ரகுநந்தன்
ஒளிப்பதிவு : பிரேம்குமார்
தயாரிப்பு : சசிகுமார்
நடிகர்கள் : சசிகுமார், லக்ஷ்மி மேனன், சூரி, விஜய் சேதுபதி, பிரபாகரன்



நம்ம சுந்தரபாண்டியன்.....



படம் பார்க்க போனா சந்தோஷமா பார்த்துட்டு வரணும்ங்கிற இலட்சியதோட வாழுறவ நானு.  அழுமூஞ்சி படங்களை பார்க்க போகவே மாட்டேன். இந்த படத்தில சிரிக்க வைக்கிறாங்கன்னு சொன்னாங்க. அதனால பார்க்க போனேன்.... 

எடுத்த உடனே உசிலம்பட்டிக்கு ஒரு பெரிய பில்ட் அப் கொடுத்து நம்ம உசுப்பேத்தி உட்காரவச்சாலும் படம் பாதி வரைக்கும் காமெடிதான். அப்புறம் வெட்டு குத்துன்னு போய் நம்மளை பயம் காட்டி கடைசில பாக்கியராஜூக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும்ல, அது மாதிரி நம்ம சசிகுமாருக்குன்னு உள்ள ஸ்டைல்ல படத்தை முடிச்சிட்டாங்க...

ஹீரோ அறிமுகம் 'தமிழ் படம்' ன்னு சிவா நடிச்சு  வெளி வந்துதே (scoof film) அதை ஞாபகப்படுத்தியது.   கொஞ்சம் செயற்கையா இருந்தது. ஆனா பாட்டு நல்லா இருந்தது. பாட்டிகளும் நல்லா  இருந்தாங்க...

படம் முழுவதும் பார்க்க பார்க்க சசிகுமார்....சசிகுமார்....சசிகுமார்.....துறுதுறுப்பா சிரித்த முகத்துடன் ரொம்ப ரொமான்டிக்கா....இப்படியே எல்லா படத்திலும் நடிச்சா நல்லா  இருக்கும். முதலில் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த கண்களில் தெரிந்த குறும்பும் சிரிப்பும் சசிகுமாருக்கு ஒரு வெல்கம் போட வைத்துவிட்டது.



அடுத்து இனிகோ பிரபாகரன் கொஞ்சம் அழகுதான். காதல் வந்து பொய்யாக பாடலில் காதலை நல்லாவே காட்டியிருக்கிறார். அப்புறம் சூரியை பற்றி சொல்லியேயாகனும். இந்த மாதிரி சாதாரணமாக நல்லா நடிக்கிறவங்களை சசிகுமார் மாதிரி ஒன்றிரண்டு பேர்தான் பயன்படுத்தனுமா என்ன.... அப்புக்குட்டி ஓகே...

கதாநாயகி

அடுத்து ஹிரோயின் லக்ஷ்மி மேனன். பெரிய பிரமாத அழகு இல்லைதான். பெரிய நடிப்பும் இல்லைதான். அதற்காக அஞ்சலி மாதிரி ஓவர் அலட்டலும் இல்லை. போதும் இந்த படத்துக்கு......


இவர்தான் இசை 

இசைக்காக ரகுநந்தனுக்கு ஒரு சபாஷ் போடலாம். கிராமத்து இசை கேட்க சுகமாக இருக்கிறது....'ரெக்கை முளைத்தேன்'  பாடலில்  வேறு ஏதோ பாட்டின் சாயல் தெரிகிறது. பரவாயில்லை...பாட்டு நல்லா  இருக்கிறதாலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.  'காதல் வந்து பொய்யாக' பாட்டில்  ஹரிச்சரனின் குரல் சொக்கவைக்கிறது.

சரி....இனி கதைக்கு வருவோம்....
அதிசயமா இந்த படத்தில கொஞ்சமா கதை இருக்குப்பா...

காதல், கொலை, வெட்டு, குத்து எது வேணும்னாலும் நீங்க பண்ணலாம்....அப்பான்னு ஒருத்தர் மட்டும் கொஞ்சம் பசையோட  இருந்தா போதும்ங்கிற கிராமத்து லாஜிக்கை வைத்துதான் கதையை ஒட்டியிருக்கிறார்கள். திருப்பியும் இன்னொரு முறை நட்பை உயிர்ப்பித்து இருக்கிறார்கள். 

இவர்தான் டைரக்டர்

ஊரில அத்தை பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனாலும் குழந்தை பெத்தாலும் இருக்கிற மவுசை அழகா உறவோட காமிச்சிருக்கார் டைரக்டர். முதல் படம்ன்னு சொல்ல முடியலை. சசிகுமாருக்கு கீழே வேலை பார்த்த அனுபவம் படம் முழுவதும் பேசுது. 

கொஞ்ச நாளைக்கு அப்புறமா ஒரு படத்தை குடும்பத்தோட உட்கார்ந்து சிரிச்சி பார்க்கலாம்னா அது இதுவா தான் இருக்கும். இப்படி அப்பப்போ ஒரு படம் வந்தா பொம்பளைங்க நாங்க கொஞ்சம் சந்தோஷப்படுவோம்ல....

தியேட்டர்ல போய் பார்க்க வேண்டிய படம்.....