Thursday, 28 July 2011

ஆரண்ய காண்டம்


ஆரண்ய காண்டம்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ நம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தை கொடுத்திருக்கிறது. அவருடைய முதல் படம் இதுதான் என்பது ஒரு ஆச்சரியம். பிற மொழிகளில் இருந்து சுட்ட கதை என்பது தெளிவாக தெரிந்தாலும் கதை கோர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.

Director Thiagarajan Kumararaja

 இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், போதை மருந்து விற்கும் கும்பலை பற்றியது. அந்த கும்பலில் இருக்கும் கொஞ்சம் நல்ல மனம் படைத்தவர்கள், நிறைய கெட்ட குணம் உடையவர்கள், இந்த கும்பலை சேராத வாழ்ந்து நொடிந்து போன ஒரு தகப்பனும் மகனும், கும்பலின் தலைவனிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அபலை பெண், அவளால் மையலில் பிறகு துப்பாக்கியால் விழ்த்தபடும் ஒன்றும் அறியாதவனாய் காட்டப்படும் ஒரு வாலிபன் இவர்கள்தான் கதையை நிர்ணயிக்கிறவர்கள்.

இந்த கதை, அது நடைபெறுவதாக காட்டப்படும் களம், அதில் நடைபெறும் தூப்பாக்கி சண்டைகள், வன்முறைகள், ஆபாசமான வசனங்கள் அனைத்துமே நம் மண்ணிற்கு சொந்தமானது இல்லை. பலதரப்பட்ட வட்ட வட்டமான DVD-களில் இருந்து copy அடிக்கப்பட்டவை. Mexican Hat மட்டும்தான் missing....



பரவாயில்லை... படம் பண்ணியவர்களை மன்னிக்கலாம்....எதற்காக என்றால்,
  •        தமிழ் சினிமாவிற்கு இந்த களம் புதிது. துணிந்து இந்த கதையை படமாக்கியதற்கு SP Charan க்கு பாராட்டுகள்.
  •       தியாகராஜன் குமார ராஜாவை சும்மா சொல்ல கூடாது. நிறைய தைரியம் வேண்டும் நம் தமிழ் சினிமாவில் ஒரு ஆணை நிர்வாணமாக காண்பிப்பதற்கு.தமிழ் நடிகர்களை அப்படி காண்பிக்க முடியாத கட்டாயதால்தான் ஜாக்கி ஷேராப்பை இறக்குமதி செய்திருக்கிறார் போல. MGR தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை கேமராவுக்கு காட்டும் விதம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இப்படி நம் சினிமாவில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்த பெண்ணை மட்டுமே அரை நிர்வாணமாக்கி காட்டும் Gender Bias இனியாவது சற்று ஒழியும் என்று நம்புவோம்.
  •        கிளைக்கதைகள் நிறைய இருந்தாலும் அதை கோர்த்திருக்கும் முறை அருமை.
  •  இதில் ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் சம்பத் ராஜ், நொடிந்துபோன ஜமிந்தாராக வரும் சோமசுந்தரம், அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் ஆகியோருடன் மட்டுமே நம்மால் கதையோடு ஒன்றி போக முடிகிறது.
  •   சமுதாயத்திற்கு கேடு செய்பவர்களிடத்தும் நல்லதும் கெட்டதும் உண்டு என்றும் அதிலேயும் கெட்டவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் சொல்லபட்டிருக்கிறது.


24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு போதைமருந்து விற்கும் கும்பலில் நடக்கும் கதையாக கண்பிக்கபட்டாலும் அதில் விறுவிறுப்புக்காக வன்முறையை அளவுக்கதிகமாக சேர்த்திருக்கிறார்கள். ஆபாச வசனங்களையும் சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி its a good attempt and as usual the debut film becomes a master piece.....







No comments:

Post a Comment