கோ படம் வந்த புதிதில் படம் நல்ல இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, எனக்கு அதை பாக்கணும்ன்னு தோணவே இல்லை. காரணம் என்னவென்றால்,
- ஜீவாவாலே strong character பண்ண முடியும் நான் நம்பவில்லை.
- ஏதாவது ஒரு profession கையில் எடுத்து அதை கடித்து குதறுவதை சில டைரக்டர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ( காக்கி சட்டையை என்ன பாடுபடுத்துகிறார்கள் )
நிறைய recommendationsக்கு பிறகு ரொம்ப லேட்டாக (அதுக்காக 5 மாதம் எல்லாம் ரொம்ப ஓவர் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...சரி, சரி...விடுங்கள்...) பார்த்தேன்.
இந்த கதைக்காகவும், photojournalism என்கிற தொழிலை வெகு லாவகமாக கையாண்டதற்கும், இதை இயக்கிய விதத்திற்காகவும் டைரக்டர் கே வி ஆனந்துக்கு "கோ" பட்டம் கொடுக்கலாம். யாரையுமே overact பண்ணவிடாம balance பண்ணி இருக்கிறார். முக்கியமாக ஜீவாவையும் பிரகாஷ் ராஜையும்....
அடுத்தது ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக்....its a hit...
டைரக்டர் K V Anand |
நம்ம heros கதைக்கு வருவோம். இந்த படத்தில்தான் ஜீவா சரியாக, casual ஆக, பாத்திரத்திற்கு தகுந்தார் போல் நடித்திருக்கிறார். இரண்டு heroines கிட்டேயும் ஒரே மாதிரி look கொடுக்காமல், வித்தியாசப்படுத்தியிருக்கார். நிறைய ஹிரோகள் செய்யிற தப்பு அதுதான். கடைசியில் 'நான் உன்னை லவ் பண்ணல்ல...அவளத்தான் லவ் பண்ணினேன்...'என்று சொல்லி நம்மையும் சேர்த்து குழப்புவார்கள்.....
Spring hair பியா பரவாயில்லை. எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிப்பு பாணி தெரியுது. மாத்திக்கலாம்.
கதையோட க்ளைமாக்ஸ் தான் உண்மையான ஹீரோ.
மீடியா, பத்திரிகைகள் எல்லாம் இன்று உண்மையை தொலைத்து, creativity என்ற பெயரில் கற்பனையாகவும் கட்டு கதைகளாகவும் எழுதுவது மட்டும் அல்லாமல், paid news போன்றவற்றையும் செய்யும் போது, ஜர்னலிசத்தின் மூலம் நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியும் என்று காட்டபட்டிருக்கிறது.
அரசியல், காவல் துறை, மிலிடரி போன்றவற்றில் இருப்பவர்கள் மட்டுமே நாட்டுக்கு நல்லது செய்வதாக அனேக படங்களில் பார்த்திருக்கிறோம். நாம் சாதாரணமாக நினைக்கும் போடோக்ராபர் மற்றும் ஜர்னலிஸ்ட் தொழிலில் இருப்பவர்கள்கூட நாட்டுக்காக தன் அர்ப்பணிப்பை அளிக்க முடியும் என்று அழகாக உணர்த்தியிருக்கிறார்கள்.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்புகிறோம். இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு பழைய கிழ பெருச்சாளிகளை, வாரிசு அரசியலை ஒழித்து, நல்ல ஜனநாயகம் நாம் நாட்டுக்கு அமையாதா என்று கூட தோன்றுகிறது.
Really the word கோ means